தனுஷின் ராயன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?தனுஷின் ராயன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

kollywood cinema: தனுஷின் ராயன் படத்தின் முதல் நாள் வசூல்: தனுஷ் இயக்கி நடித்த இரண்டாவது திரைப்படமான ராயன் நேற்று உலகமெங்கும் வெளியானது. நாளை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை குஷி படுத்துவதற்காக அவரின் 50 வது படத்தை இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் அவருடன் சேர்ந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்ட பல  முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக படத்தோட செகண்ட் ஹீரோவாக இருந்து படத்திற்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார் இசை புயல் ஏ.ஆர். ரகுமான்.

நேற்று படம் வெளியானதில் இருந்து இப்பொழுது வரை கலவையான விமர்சனமே பெற்று வருகிறது. இருப்பினும் தனுஷ் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தான் வருகிறார்கள்.

மேலும் நடிப்பையும் தாண்டி தனுஷ் டான்ஸ், சிங்கிங் என புகுந்து ஒரு கை பார்த்து வந்தவர் தற்போது இயக்கத்திலும் தன்னுடைய முழு திறமையும் இறக்கி வருகிறார்.

Also Read: தனுஷ் ராயனாக ஜெயிச்சாரா? இல்லையா?  படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!!!

இதற்காக பல திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ராயன் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் முதல் நாள் முடிவில்  உலகம் முழுவதும் ரூ. 17.5 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். மேலும் இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. dhanush fans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *