தனுஷ் ராயனாக ஜெயிச்சாரா? இல்லையா?  படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!!!தனுஷ் ராயனாக ஜெயிச்சாரா? இல்லையா?  படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!!!

Kollywood Cinema: தனுஷ் ராயனாக ஜெயிச்சாரா: தமிழ் சினிமாவில் ஆக்ட்டிங், சிங்கிங், டைரக்சன் மற்றும் தயாரிப்பாளர் என ஆல் இன் ஆல்  அழகு ராஜாவாக இருந்து வருபவர் தான் தனுஷ். இவர் இயக்கி நடித்த முதல் திரைப்படம் தான் பா. பாண்டி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. அந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய 50வது படத்தை நான் தான் இயக்கி நடிப்பேன் என்று தற்போது அவர் எடுத்துள்ள திரைப்படம் ராயன்.

கேங்ஸ்டர் படமாக  உருவாகி உள்ள ராயன் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. ஜூலை 28 தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக படத்தை முன்கூட்டியே படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் கண்டிப்பாக தனுஷின் பிறந்த நாள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராயன் படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் தங்களது விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

படத்தின் ஓப்பனிங் சீனில் இருந்து கிளைமாக்ஸ் சீன் வரை ரத்தம் தெறித்து கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு படத்தில் கொடூரமாக வெட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தனுஷ் வழக்கம் போல் அசுரன் போல் நடித்துள்ளார். அவருக்கு சமமாக நடிப்பு  அரக்கன் எஸ்.ஜே  சூர்யாவும் நன்றாக நடித்துள்ளார். இப்படத்தின் மற்ற கதாப்பாத்திரமும் தங்களுடைய அருமையான நடிப்பை வெளிக் காட்டி உள்ளனர்.

Also Read: GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன அந்த வார்த்தை – படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!!

ஃபர்ஸ்ட் ஆப் கொஞ்சம் ஸ்லோவா போனாலும் செகண்ட் ஆப் தனுஷ் மிரட்டி இருக்கிறார் தான் சொல்ல வேண்டும். படத்தின் இண்டர்வெல் வெறித்தனமாக இருந்தது.

அதை விட படத்துக்கு நங்கூரமாக இசைப்புயல் ஏ. ஆர் ரகுமானின் இசை இருந்துள்ளது. மேலும் படத்துக்கு பிளாஸாக அமைந்துள்ளது.

பாடல்களும் திரைக்கதையும் அருமையாக இருந்தது. இந்த படத்துக்கு ரேட்டிங்  5 க்கு 3.5 கொடுக்கலாம்.  ட்விட்டர் விமர்சனம் இதோ, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *