
ஆன்மிகவாதிகள் பெரிதும் எதிர்பார்த்த சனிப்பெயர்ச்சி இன்று முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, சனிபகவான் இன்று, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குடிபெயர்கிறார். இதனால், தனுசு ராசிக்கு 4-ம் இடத்தில் சனி அமர்ந்து பலன்களை வழங்க இருக்கிறார். மேலும் இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்க போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்:
சின்னச் சின்ன வேலைகளை கூட பெரிதாக நினைத்து முடிப்பீர்கள். பணச் செலவு அதிகமாக இருக்கும். மனைவியிடம் பாசமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் விவாகரத்து வரை செல்லலாம்.
தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்கி கொள்ள கூடும். குடும்ப சொத்து பிரச்சனையில் பொறுமையாக இருக்க வேண்டும். நிலம் வாங்குவது விற்பதையும் தவிர்க்க வேண்டும்.
எல்லா விஷயத்திலும் நிதானமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் தங்க ஆபரணங்களை யாருக்கும் தரவும் வேண்டாம், வாங்கவும் வேண்டாம்.
திருமணம் ஆகாமல் காத்திருப்பவர்களுக்கு, குரு பகவான் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும். உங்களுடைய உறவுகளிடையே மோதலும் பிரச்சனையும் உண்டாகும்.
மாணவ, மாணவியர்களுக்கு தேவையில்லாத சிக்கலில் சிக்க கூடும். வேலைக்குப் போகும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் உருவாகும்.
தனுசு சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்:
விநாயகர், விஷ்ணு, அனுமன், ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு, நரசிம்ம உள்ளிட்ட கோவில்களில் வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.