ஆபாச வீடியோவை ரிலீஸ் செய்வேன்.., தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக பிரமுகர்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!ஆபாச வீடியோவை ரிலீஸ் செய்வேன்.., தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக பிரமுகர்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

பாஜக பிரமுகர் கைது

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் கொஞ்ச நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்தை குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் அவரின் ஆபீஸ் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என்றும் வெளியிட கூடாது என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாக பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில் மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இதில் கைதான பாஜக தலைவர் அகோரம் ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதால் கடந்த 2021ம் ஆண்டு கைதானவர் குறிப்பிடத்தக்கது. 

நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி விவகாரம்.., மூத்த நிர்வாகியை தட்டி தூக்கிய காவல்துறை – 50 நாட்களுக்கு பிறகு கைது!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *