தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம்: தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருவது தருமபுரி மாவட்டம். விவசாயம் இல்லாமல் தொடர்ந்து வறண்ட மாவட்டமாக இருந்து வரும் தருமபுரியை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தர்மபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக விவசாயிகள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம்
இருந்தாலும் இப்பொழுது வரை தமிழக அரசு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பா.ம.க. அன்புமணி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தருமபுரி மாவட்ட மக்கள் நலன் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.
குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை போன்ற 10 அணைகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தத்தளித்து வருகின்றனர். dharmapuri district
Also Read: வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் உயிரிழப்பு – வெளியான ஷாக்கிங் தகவல்!
இருந்தாலும் இப்பொழுது வரை அரசிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தர்மபுரி மாவட்டம் முழுவதும் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். anbumani ramadoss
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்