சித்த மருத்துவ அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023. தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ அலுவலகத்தில் AYUSH பிரிவில் NHM திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பதிவுகளுக்கு ஒப்பந்த்திகா அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, காலிப்பணியிடங்கள் விபரம், எண்ணிக்கை, சமபலம் ஆகியவற்றை கீழ்க்காணலாம்.
சித்த மருத்துவ அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023
வகை
அரசு வேலை
அலுவலகம்
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்
காலிப்பாணியிடங்களின் பெயர் & எண்ணிக்கை :
மாவட்ட திட்ட மேலாளர் – 1
தரவு உதவியாளர் – 1
மருந்து வழங்குவர் – 9
பல் நோக்கு சுகாதார பணியாளர் – 9
கல்வித்தகுதி:
மாவட்ட திட்ட மேலாளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்ச இளங்கலை பட்டம், பொது சுகாதார நிறுவனங்களில் பணி அனுபவம், MS Office உட்பட கணினி பற்றிய அடிப்படை அறிவு.
தரவு உதவியாளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து கணினி பயன்பாடு அல்லது அதற்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம், தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 1 வருட அனுபவம், கணினி அறிவு அவசியம்.
உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! உடனே Apply பண்ணுங்க !
மருந்து வழங்குவர் – அரசு அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவ நிறுவனத்தில் 2 வருட படிப்புடன் தகுதியான மருந்தாளர் அல்லது பயிற்சி இல்லை என்றால் 10வது தேர்ச்சி.
பல் நோக்கு சுகாதார பணியாளர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
மாவட்ட திட்ட மேலாளர் – ரூ.30,000 மாதம்
தரவு உதவியாளர் – ரூ.15,000 மாதம்
மருந்து வழங்குவர் – ரூ.750 ஒரு அமர்வுக்கு (பயிற்சி பெற்றவர்களுக்கு),
ரூ. 500 ஒரு அமர்வுக்கு (10ஆம் வகுப்பு தேர்ச்சி)
பல் நோக்கு சுகாதார பணியாளர் – ரூ. 300 ஒரு அமர்வுக்கு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவண நகல்களுடன் தஞ்சாவூர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை 15.12.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். சித்த மருத்துவ அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL APPLICATION | CLICK HERE |
தபால் அனுப்ப வேண்டிய முகவரி :
செயற் செயலாளர்
மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர்,
சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
காந்திஜி ரோடு, LIC கட்டிடம் அருகில்,
தஞ்சாவூர் – 613 001.
04362 – 273503.
முக்கிய குறிப்பு
மேற்கண்ட பணியிடங்கள் அனைத்தும் தாற்காலிகமானதாகும்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
AYUSH (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) பற்றிய தகவல்:
முன்னதாக, மாநிலம் முழுவதும் உள்ள PHCகளில் 479 AYUSH கிளினிக்குகள் நிறுவப்பட்டுள்ளன.பின்னர், 2009-10ல், NRHM-ன் கீழ் AYUSH மருத்துவர்களை பணியமர்த்துவதன் மூலம் இந்த சேவை மேலும் 300 PHC களுக்கு நீட்டிக்கப்பட்டது.