திருவண்ணாமலை DHS ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
திருவண்ணாமலை DHS ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
பணி :
செவிலியர் / MLHP
பணியிடங்கள் :
செவிலியர் / MLHP – 25.
சம்பளம் :
RS.18,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Diploma in GNM / BSc (Nursing) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
BEML வேலைவாய்ப்பு 2024 ! Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை மாத சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !
வயது தகுதி :
அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
கௌரவ செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை அலுவலகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மேற்கண்ட பணிகளுக்கு 06.03.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
குறிப்பு :
இனசுழற்ச்சி வாயிலாக காலிப்பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்.
காலிப்பணியிடங்கள் நியமனம் செய்யப்படுவது மாறுதலுக்குட்பட்டது.