டிஜிட்டல் தங்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா ? - எப்படி வாங்குவது…என்னென்ன பலன்கள் !டிஜிட்டல் தங்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா ? - எப்படி வாங்குவது…என்னென்ன பலன்கள் !

தற்போதுள்ள நடைமுறையில் டிஜிட்டல் தங்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா ? மேலும் இந்த டிஜிட்டல் கோல்டை வாங்கும் முறை மற்றும் இந்த டிஜிட்டல் கோல்ட் பயன்கள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் தங்கத்திற்கான விலை மற்றும் அதற்கான தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.

இருப்பினும் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும் வழக்கம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டை பொறுத்த வரை தங்கத்தின் மீதான முதலீடு என்பது மிகவும் பாதுகாப்பானதாக பெரும்பாலான மக்களிடையே கருதப்படுகிறது.

இதனையடுத்து எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நபர்கள் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்து வருகின்றனர்.

அதே சமயம் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களிடையே தற்போது டிஜிட்டல் கோல்ட் வாங்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் டிஜிட்டல் முறையில் வாங்கும் தங்கம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தற்போதுள்ள தலைமுறையினரில் 75 சதவீதம் பேர் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாம் வழக்கமாக நகைக்கடைகளுக்கு சென்று நேரடியாக தங்கம் வாங்கும் போது எப்படி செய்கூலி மாற்று சேதாரம் போன்றவை சேர்க்கப்படும்.

அதே போல் டிஜிட்டல் முறையில் விர்ச்சுவலாக தங்கம் வாங்கும் பொழுது இந்த சிக்கல் இல்லை.

மேலும் இந்த டிஜிட்டல் முறையில் வாங்கும் தங்கத்திற்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. மேலும்பத்திரமாக லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதை எளிதில் வாங்கி ஆன்லைனில் வைத்துக் கொள்ளலாம்.

அத்துடன் கிராம் மற்றும் பவுன் என இல்லாமல் சிறிய அளவிலான தங்கம் வாங்கும் முறை இந்த டிஜிட்டல் தங்கத்தில் உள்ளது.

மேலும் நேரடியாக தங்கம் வாங்குவதற்கு இணையான மதிப்பினை இந்த டிஜிட்டல் முறை கொண்டுள்ளது.

BSNL-லின் புதிய லோகோ வெளியீடு – 7 புதிய சேவைகள் தொடக்கம் !

இதன் அடிப்படையில் டிஜிட்டல் தங்கத்தை நம்பகமான தளங்களின் வழியாக வாங்கி கொள்ளலாம்.

அந்த வகையில் டாடா தனிஷ்க், Augmont கோல்ட், எம்எம்டிசி-பிஏஎம்பி இந்தியா பிரைவேட் லிமிடெட் போன்ற இந்தியாவில் டிஜிட்டல் முறையில் தங்கம் வழங்கும் நிறுவனங்கள் மூலம் இந்த டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கலாம்.

இதையடுத்து கூகிள் பே, போன் பே, பேடியம் போன்ற செயலிகளின் மூலமாகவும் இந்த டிஜிட்டல் கோல்ட் வாங்கி பயன் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *