தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஊரில் ஒரு company-யில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, முத்துராஜ் (வயது 50) என்பவர் பூஞ்சோலையிலிருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் இரும்பு பீரோ, கட்டில் செய்யும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து.., பல லட்சம் பொருட்கள் நாசம்.., போலீஸ் விசாரணை!!
பொங்கல் விடுமுறை முடிந்து, பூட்டி வைக்கப்பட்டிருந்த கம்பெனியை இன்று திறந்து உள்ளார். அப்போது அந்த கம்பெனியில் உள்ள பெயிண்ட் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து கரும்புகை உடன் சேர்ந்து தீ பரவ தொடங்கியது. சிறிது நேரத்தில், தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழத் தொடங்கியது.
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் 2025: ரோஹித் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!!!
இதனை தொடர்ந்து இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தீ முழுவதும் அடைக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தில் லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஆகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை., 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்!!
தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!
மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?
டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல்.., என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?