திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்: திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சியில் கணக்கு பிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் தான் சரவணன். அவர் மீது சில பணம் விஷயத்தில் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் தொடர்ந்து மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தெளிவாக சொல்ல போனால் சரவணன் தினமும் வசூலிக்கும் வரி பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஒரு சில தடவை பாதி பணத்தை வங்கியில் போட்டு மீதி பணத்தை தனக்கென்று எடுத்து செலவளித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் நேற்று அவர் ரூ.2 லட்சத்தை கையாடல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மூன்று குற்றவியல் சட்டம் விவகாரம் – திமுக வழக்கறிஞர்கள் உண்ணாவிரத அறப்போராட்டம்!
அதாவது, நேற்று வரிப்பணம் ரூ.6 லட்சத்தில் ரூ.4 லட்சத்தை மட்டும் வங்கியில் செலுத்தி விட்டு ரூ.2 லட்சத்தை கையாடல் செய்துள்ளார். கணக்கு பிரிவு அலுவலர்கள் கணக்குகளை சரி பார்க்கும்போது சரவணன் கையாடல் செய்தது தெரிந்தது. இதை தொடர்ந்து சரவணனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் வங்கியில் பணம் செலுத்தும் போது முறையாக கண்காணிக்காத சாந்தி என்பவருக்கும் கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்
சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா
பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
என்னது பலூனுக்குள்ள தியேட்டரா? – தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?
உதகை குதிரை பந்தய மைதானம் மீட்பு