Home » செய்திகள் » டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் – வீடியோ வைரல்!!

டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் – வீடியோ வைரல்!!

டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் - வீடியோ வைரல்!!

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது, டிங்கா டிங்கா வைரஸ் 2024 தீவிரமாக பரவி வரும் நிலையில் இது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

Dinga Dinga Virus:

உலகத்தில் எத்தனையோ அரிய வகை வைரஸ் நோய் தாக்கி வருகிறது. இதனால் சில உயிர்களும் பலியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது, உகாண்டாவின், புண்டிபுக்யோ மாவட்டத்தில் ஒரு அறிய வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த நோய்  பெண்கள் மற்றும் குழந்தைகளை தான், அதிகம் தாக்குவதாக கூறப்படுகிறது. இந்த தொற்று நோய்க்கு ‘டிங்கா டிங்கா வைரஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நிற்கும் போது கூட, டான்ஸ் ஆடி கொண்டே இருப்பார்களாம். இந்த வைரஸ் ஏற்பட்டால், அவர்களின் உடல் நடுக்கமும் தாண்டி, காய்ச்சலும் முக்கிய அறிகுறியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த வைரஸால் இதுவரை 300 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்த நோயால் இப்பொழுது வரை யாரும், பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம், நோயாளிகள் ஒரு வாரத்தில் குணமடைந்து வீட்டுக்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நோய் எங்கிருந்து பரவ ஆரம்பித்தது என்பது குறித்தும் இப்பொழுது வரை மர்மமாகவே இருந்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! கடும் அச்சத்தில் பொதுமக்கள்!

CSK வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்? – வலைவிசி தேடி வரும் போலீஸ்!

2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!

2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top