பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது மனைவியை டைவர்ஸ் செய்த -தாக தற்போது ஷாக்கிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீனு ராமசாமி:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் வெளியான நீர் பறவை, தர்மதுரை, தென்மேற்கு பருவமழை, மாமனிதன், கண்ணே கலைமானே உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதில் மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது.
மனைவியை டைவர்ஸ் செய்த சீனு ராமசாமி – 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!
மேலும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான கோழிப்பண்ணை செல்லதுரை படம் ஓரளவு கலவையான விமர்சனம் பெற்றது. இந்நிலையில் சீனு ராமசாமி தனது மனைவியை டைவர்ஸ் செய்ய இருப்பதாக ஷாக்கிங் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியதாவது, ” அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் என்னுடைய மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எந்த விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார். எனவே எங்கள் பிரிவுக்கு உதவும்படி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை – சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!
இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக, சினிமாவில் உள்ள தனுஷ், ஜி.வி.பிரகாஷ், ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரஹ்மான் என பல பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து – உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!
ஹாலிவுட்டில் தனுஷுடன் நடிக்கும் சிட்னி ஸ்வீனி – அச்சச்சோ அவர் டிரெஸ்ஸே போடமாட்டாரே?
பிக் பாஸ் 8ல் மிட் வீக் எவிக்ஷன் – அதிர்ச்சியுடன் வீட்டுக்கு பொட்டியை கட்டும் போட்டியாளர் யார்?
2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!
வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு – இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!
லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!