
பிரபல இயக்குனர்
தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் வெற்றி கனியை சுவைக்க வேண்டும் என்று பலரும் போராடி வருகின்றனர். அதுமட்டுமின்றி திரையுலகில் நுழைந்த கொஞ்சம் காலத்தில் தமிழ் ரசிகர்கள் தூக்கி கொண்டாடுவது பெரிய விஷயம். அப்படி ஒருவரை தூக்கி கொண்டாடியவர் தான் இயக்குனர் தங்கசாமி. இவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ராட்டினம் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து எட்டுத்திக்கும் மதயானை என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதன்பின் திருமணம் செய்து கொண்டு பிசினஸில் இறங்கினார். இவருக்கு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குனர் தங்கசாமி கடந்த மார்ச் 13ம் தேதி இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளாவுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் மூன்று பேருக்கும் முக்கிய எலும்புகள் நொறுங்கி போன நிலையில் கேரளா ஆலுவா ராஜகிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்களாம்