லப்பர் பந்து படக்குழுவிற்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு - எல்லாருக்குமான படமாக இருக்கிறது என்று கருத்து !லப்பர் பந்து படக்குழுவிற்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு - எல்லாருக்குமான படமாக இருக்கிறது என்று கருத்து !

தற்போது திரையரங்குகளில் வெளியான லப்பர் பந்து படக்குழுவிற்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த லப்பர் பந்து திரைப்படம் எல்லாருக்குமான படமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ படமானது கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட உருவாக்கப்பட்ட கதையாகும். மேலும் இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

அந்த வகையில் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

அத்துடன் ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். மேலும் தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் லப்பர் பந்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தின் எழுத்தாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி? என்ன காரணம் தெரியுமா?

நான் இந்த படத்தை பார்த்த போது எங்கள் ஊரில் கிரிக்கெட் அணி வைத்து நடத்தியது தான் ஞாபகத்திற்கு வந்தது. அத்துடன் நானும் படத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரம் தான். மேலும் லப்பர் பந்து எல்லாருக்குமான படமாக இருக்கிறது என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *