பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் - எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தம் தெரியுமா ?பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் - எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தம் தெரியுமா ?

தற்போது அனைவராலும் அதிகமாக விரும்பி உண்ணும் துரித உணவான பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள், அடிக்கடி இது போன்ற உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்துகிறது.

நமது இந்த நகர வாழ்க்கையில் யாரும் வீட்டில் சமைக்கும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை. மாறாக துரித உணவுகளை எடுத்துக்கொள்ளவதே நமது விருப்பமாக உள்ளது.

அந்த வகையில் பெரும்பாலானவர்களால் அதிகமாக விரும்பி சாப்பிடப்படும் துரித உணவாக இருப்பது பிரைடு ரைஸ். ஆனால் பிரைடு ரைஸ் ஒரு சுவையான உணவு என்றாலும் இது பல வழிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

ஹோட்டல்களில் சமைக்கப்படும் இந்த பிரைடு ரைஸ் பொதுவாக அதிக கலோரிகளை கொண்டுள்ளது,

மேலும் குறிப்பாக எண்ணெய் மற்றும் சமைத்த முட்டைகளுடன் தயாரிக்கப்படும்போது, அதன் அதிக கலோரியை உட்கொள்வது உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

இதனை தொடர்ந்து பிரைடு ரைஸில் பொதுவாக நார்ச்சத்து குறைவாக இருக்கும், இதன் காரணமாக செரிமான பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

மேலும் நார்ச்சத்து குறைவாக இருக்கும் உணவுகளை உட்கொள்ளும் போது நீண்டகால நோய்களான இருதய நோய், பக்கவாதம் மற்றும் சில வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

மேலும் அதிக சோடியம் குறிப்பாக சோயா சாஸ், மீன் சாஸ் அல்லது உப்பு மற்றும் சமையல்களில் வெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுவதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயை உண்டாக்கும்.
.
இதனையடுத்து சில கடைகளில் பிரைடு ரைஸ் சமைக்கும் போது பதப்படுத்தப்பட்ட இறைச்சி, காய்கறிகள் அல்லது சோறு போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது,

இதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பொதுவாக சோடியம், சர்க்கரை மற்றும் பிற சேர்க்கைகள் அதிகம் இருக்கும், குறைந்த ஊட்டச்சத்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் குறைந்த அளவைக் கொண்டுள்ளது.

பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? – ஆய்வில் அதிர்ச்சி தகவல் – மக்களே உஷாரா இருங்க!

இவற்றை கருத்தில் கொண்டு வீட்டில் பிரைடு ரைஸ் தயாரிக்கும்போது, ​​நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் சோடியம் அளவு, முழு தானிய சோறு, காய்கறிகள் மற்றும் நல்ல இறைச்சி போன்ற ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து சமைத்து உண்பதால் உடல் நலத்திற்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *