தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் ஏதேனும் பண்டிகை நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா நாளை முதல் ஆரம்பமாக இருக்கிறது.
இந்த திருவிழா கிட்டத்தட்ட 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கும். மேலும் இந்த திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
அதுமட்டுமின்றி அவர்களுக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே நாளை நடக்க இருக்கும் திருவிழாவை முன்னிட்டு நாகை, கீழ்வேளூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. school holiday tamilnadu
Also Read: என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா? Y Chromosome மறைந்து வருவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்!!
மேலும் மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்று தெரிவித்துள்ளது. அதே போல் இந்த விடுமுறை வங்கிகளுக்கும் பொருந்தாது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 29ம் தேதி வேலை நாளாகும் என மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். district collector
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்