tamilnadu cm stalin மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் கூறிய 5 முக்கிய உரைகள்: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து இன்று தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். எனவே மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உரையில் கூறிய முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு,
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மற்றும் மேம்பாட்டிற்கும் முக்கியமான ஆண்டுகள். எனவே நலப் பணிகளை சிறப்பாக செய்ய கூடிய கடமை நமக்கு இருக்கிறது.
- வருவாய் துறையில் பட்டா மாறுதல் மற்றும் சான்றிதழ் பெறுவதில் தனி கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் என அனைத்தையும் கவனமாக கண்காணிக்க வேண்டும்.
- போதை பொருள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டு படுத்திருந்தாலும் அது போதாது, போதைப் பொருள் நடமாட்டம் என்பது சட்டம், ஒழுங்கு மட்டுமல்லாது சமூக பிரச்சனையும் கூட, எனவே போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
- சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சமூக நலத் திட்ட செயலாக்கம், வேலைவாய்ப்பு, கட்டமைப்பு மேம்பாடு என அரசு சேவைகள் மக்களுக்கு கிடைப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
திட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி, புதிய உத்வேகத்துடன் செயல்படுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். mk stalin – tamilnadu cm stalin – District Collectors
தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு? ஜூலை 1 முதல் அமல்? – தமிழ்நாடு அரசு அதிரடி!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024
பொறியியல் மாணவர் சேர்க்கை 2024