மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு நடவடிக்கை !மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு நடவடிக்கை !

தற்போது மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை போல விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை பள்ளிக் கல்வித்துறை கண்டுபிடித்துள்ளது. அந்த வகையில் முறைகேடாக மாணவர்களின் அதிக எண்ணிக்கையை பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற்று வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. District-wise appointment of officials to monitor schools

அந்த வங்கியில் பள்ளிக்கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ் தரத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி – போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

இதனை தொடர்ந்து இந்த அதிகாரிகள் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகளில் ஆய்வு மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வானது மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மாவட்டம் தோறும் ஆய்வுசெய்து, அறிக்கையை வரும் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *