தீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லைதீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லை

  தீபாவளி 2023 இந்த ஆண்டில் பட்டாசு வெடிப்பதர்க்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன் படி பண்டிகை நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சுற்றுசூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத பசுமை பட்டாசுகளை மட்டுமே தொழிற்சாலைகளில் தயார் செய்யவும் விற்பனை செய்ய வேண்டும். மேலும் தீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கி உள்ளது.

தீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லை

தீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லை

பாரம்பரிய கொண்டாட்டம் :

   இந்து சமய மக்களின் முக்கிய பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் படி தீபாவளியானது நவம்பர் மாதம் 12ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) கொண்டாடப்பட்ட இருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அதிகாலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வர். இவைகள் தான் பாரம்பரியமாக நடைபெற்று வருகின்றது.  

பட்டாசு வெடிப்பது ஏன் :

   இராமாயணத்தில் இராமன் 14 வருடங்கள் வனவாசம் இருந்து அயோத்திக்கு திரும்பும் போது மக்கள் விளக்கு ஏற்றி வரவேற்ற நிகழ்வினை தீபாவளி பண்டிகையாக மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். மகாபாரதத்தில் கிருட்டிண பகவான் மக்களுக்கு தீங்கு செய்த நரகாசுரனை வதம் செய்த நிகழ்வினை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர் என்றும் புராணக்கதைகள் சொல்லுகின்றது.

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட்டம் :

   தமிழ்நாட்டில் அனைத்து பாரம்பரிய கொண்டாட்டங்கள் வழக்கம் போல் நடைபெறும். ஆனால் அன்றைய தினங்களில் பட்டாசு வெடிக்கும் அளவு அதிகமாகத் தான் இருக்கும். பட்டாசுகளில் இருந்து வரும் புகை மற்றும் அதிக ஒலி சுற்றுசூழலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே இவைகளை குறைக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு :

   தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகளை கூறி இருக்கின்றது உச்ச நீதிமன்றம். அதன் படி காலை 6மணி முதல் 7மணி வரையிலும் இரவு 7மணி முதல் 8மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மொத்தமாக இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க கடந்த ஆண்டினை போல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  

பட்டாசு கட்டுப்பாடு :

   பட்டாசு வகைகளில் சரம் மற்றும் பேரியம் பொருள் கொண்டு தயார் செய்யப்படும் வெடிகளை வெடிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறி சரம் மற்றும் பேரியம் சார்ந்த வெடிகளை வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுசூழக்கு பாதிப்புகள் ஏற்படாத பட்டாசுகளை மட்டுமே தொழிற்ச்சாலையில் தயார் செய்யவும் கடைகளில் விற்பனை செய்வதர்க்கும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பசுமை பட்டாசுகளை மட்டுமே மக்கள் வெடிக்க அனுமதி அளித்துள்ளது. 

கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் :

   தீபாவளி அன்று பட்டாசு 2மணி நேரம் மட்டுமே வெடிப்பதர்க்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். சரம் , பேரியம் சார்ந்து தயார் செய்த பட்டாசுகளை வெடிக்க அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இவைகளை மீறும் நபர்கள் மீது அபராதம் அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜி-20 மாநாட்டில் நடராஜர் சிலையின் விலை எவ்வளவு தெரியுமா !

யாருக்கெல்லாம் இந்த கட்டுப்பாடு :

   டெல்லி உட்பட நாடு முழுவதும் இருக்கும் அனைத்து நகரங்களுக்கும் நீதிமன்றம் அளித்து இருக்கின்ற கட்டுப்பாடுகள் பொருந்தும்.  

தீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லை

தீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லை

ஆண்டிற்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதர்க்கு வெளியூரில் இருக்கும் நபர்கள் எல்லாரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். குடும்பமாய் கொண்டாடும் விழாவாக தீபாவளி இருந்தாலும் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக இருப்பது பட்டாசு தான். இத்தகைய பட்டாசு வெடிப்பதிலும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை கூறியுள்ளது. நீதிமன்றம் கூறியுள்ள கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்புடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *