திமுக கூட்டணி கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டி. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியிடும் தொகுதியை ஒதுக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
CLICK TO JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
மதிமுக, திமுக தனிச் சின்னத்தில் போட்டி :
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலில் விசிக ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களே.., 2024 சர்வதேச மகளிர் தின பரிசு.., பிரதமர் மோடி வெளியிட்ட மெகா பம்பர் அறிவிப்பு!!
அதனை போல கடந்த முறை மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் தனிச் சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது