
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் மேலும் சில முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யபடுவார்கள் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CILCK TO JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஜாபர் சாதிக் கைது:
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த நிலையில், பல கட்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாபர் சாதிக் உடன் அமீருக்கு தொடர்பு :
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இந்த கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு தொடர்புள்ளதாக NCB தலைவர் கியானேஸ்வர் சிங் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! 3 தொகுதிகளில் பாஜக வெற்றி நிச்சயம் – அடித்து கூறிய அண்ணாமலை
மேலும் தமிழ், இந்தி சினிமா வட்டாரத்தில் பலருக்கும் இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் யார் யார் என்ற விவரத்தை தற்போது வெளியிட முடியாது எனவும் இயக்குனர் அமீர் உள்ளிட்டோரிடமும் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.