பணிப்பெண்ணை தாக்கிய திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள். வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு விசாரணை :
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆகிய இருவரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி மேலும் இந்த வழக்கில் காவல்துறையின் பதில் என்ன என்று அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து நீதிபதி,
சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்த போராட்டம் ! பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டாக அறிவிப்பு ! அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் :
பணிப்பெண்ணை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகிய இருவரும் இரண்டு வாரம் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.