Home » செய்திகள் » திமுக முப்பெரும் விழா 2024 ! ஜூன் 15ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் என கட்சி தலைமை அறிவிப்பு !

திமுக முப்பெரும் விழா 2024 ! ஜூன் 15ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் என கட்சி தலைமை அறிவிப்பு !

திமுக முப்பெரும் விழா 2024 ! ஜூன் 15ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் என கட்சி தலைமை அறிவிப்பு !

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றியை தொடர்ந்து திமுக முப்பெரும் விழா 2024 தற்போது நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் எல்என்டி புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் திமுக சார்பில் வருகிற 14ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் இன்று ஆய்வுமேற்கொண்டனர். இந்நிலையில் கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் சீர்மிகு வெற்றிக்கு கழகத்தை வழிநடத்திச் சென்ற முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா என “முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட

எம்.பி-க்கள் பதவி பிரமாணம் எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜூன் 14ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில்” நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top