திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. நாளை மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வட இந்தியா பக்கம் அதிக வாக்குகளை பெற்ற பாஜக கட்சி தமிழகத்தில் மண்ணை கவ்வியது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. அங்கே பாஜக கட்சி ஒரு டெபாசிட் கூட வாங்கவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இன்று மாலை திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே நடக்க இருக்கும் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் புதிய நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி கருணாநிதி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற குழு தலைவராக விளங்கி வரும் டி.ஆர்.பாலுவின் பெயரும் அதில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்று மாலை யார் நாடாளுமன்ற குழு தலைவர் என்று தெரிந்து விடும். திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி – lok sabha election 2024 – DMK party – mp Kanimozhi karunanidhi – DMK Parliamentary Committee President 2024 – election news – tamilnadu cm stalin
T20 world cup 2024: இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம் … கடைசி வரை கொண்டு போய் திரில் வெற்றி?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்
கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்
தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனம் பறிமுதல்