மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில், திமுக கட்சியின் முக்கிய புள்ளி எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீர் மரணம்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்டணி வைத்த கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரான துரை.ரவிக்குமாருக்கு ஆதரவாக திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். விக்கிரவாண்டி மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினர் புகழேந்தியும் தீவிர வாக்கு சேகரிப்பில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரசாரத்தில் புகழேந்தி கலந்து கொண்ட நிலையில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏற்கனவே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர். எனவே அவருக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி புகழேந்தி உயிரிழந்தார். எம்எல்ஏவின் திடீர் மறைவு, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது