
Breaking News: நீங்க 10க்கும் மேற்பட்ட சிம் கார்டு Use பண்றீங்களா: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் செல்போன் இல்லாத ஆட்களே இருக்க முடியாது. அதிலும் ஒருவர் பல சிம் கார்டுகளை யூஸ் செய்வது இயல்பாகிவிட்டது. அப்படி ஒரு மனிதன் பல சிம்களை பயன்படுத்தினால் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்று பாவம் அவர்களுக்கு தெரிந்தபாடில்லை.
நீங்க 10க்கும் மேற்பட்ட சிம் கார்டு Use பண்றீங்களா
ஆனால் ஒரு மனிதன் 9 சிம் கார்டுகளை சட்டப்படி வைத்து கொள்ளலாம் என்று கடந்த 2023ம் ஆண்டு இந்தியத் தொலைத்தொடர்பு சட்டம் என்ற விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
அதையும் தாண்டி, அதாவது 9 சிம் கார்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அவருக்கு ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனையை அனுபவிக்க கூடும்.
அதே போல வடகிழக்கு மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் திரிபுரா மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 6 சிம் கார்டு மட்டுமே வைத்திருக்க அனுமதி உண்டு.
அதுமட்டுமின்றி சிலர் பல சிம்களை வைத்து தவறான செயல்களை செய்து வருகின்றனர். எனவே மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
Also Read: கேரளா அரசு மருத்துவமனை லிப்டில் 2 நாட்கள் சிக்கிய முதியவர் – LIFT ஆப்ரேட்டர் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்!
மேலும் உங்களுடைய பெயரில் எத்தனை சிம்கள் ஆக்டிவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள TAFCOP என்ற வெப்சைட் மூலமாக மொபைல் எண்ணை பதிவு செய்து, உங்களது பெயரில் உள்ள எண்களை சரிபார்க்க முடியும்.
அதுமட்டுமின்றி இதில் உள்ள எண்களை நீக்கவும், தொடரவும் முடியும் என்று கூறப்படுகிறது.
மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ?
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை
தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை