
அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இதுகுறித்து மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வந்ததால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிரமத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை – புதிய கட்டுப்பாடு விதித்த அமைச்சர்!
இந்நிலையில் அமைச்சர் ஆர். சுப்பிரமணியன் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளை கவனித்துக்கொள்ள வருபவர்களுக்கு கையில் ஒரு அடையாள டேக் கட்டப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த டேக்கில் அவர் எந்த நோயாளியை கவனிக்க வந்துள்ளார் என்றும் எந்த வார்டில் அந்த நோயாளி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரமும் அந்த அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தமிழகத்தில் நவம்பர் 15 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
மேலும் இந்த டேக் கையில் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில், தற்போது இது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அமல்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை