
Doctor write to Prescription in Capital Letters
JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS
DOCTOR PRESCRIPTION :
Doctor Prescription in Capital Letters. தற்போதுள்ள நிலையில் நமது உடல்நிலை சரியில்லாத நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது அல்லது ஆலோசனை கேட்பது என்பது அனைவரும் பின்பற்றக்கூடிய பொதுவான நடைமுறையாகும். அவ்வாறு மருத்துவ ஆலோசனைக்கு பிறகு மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்து சீட்டில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை அறிய தனியாக ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். சில நேரங்களில் மருந்து விற்பனையாளர்களுக்கு டாக்டர் PRESCRIPTION என்னவென்று புரிவதில்லை இதனால் நோயாளி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.
தமிழக அரசு பள்ளிகளே.., கட்டாயம் இதை செய்ய வேண்டும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு!!!
தமிழ்நாடு மருத்துவத்துறை உத்தரவு :
இந்த நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மருத்துவத்துறை அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மருந்து சீட்டில் (RESCRIPTION) நோயாளிகளுக்கு புரியும் வகையில் CAPITAL எழுத்தில் எழுதி தரவேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றினால் தேவையற்ற குழப்பம் தவிர்க்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.