நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது எப்படி? தமிழகத்தில் கடந்த சில நாட்களாக செல்லப் பிராணிகளாக வளர்த்து வரும் நாய்களால் குழந்தைகள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த மே 6ம் தேதி சென்னையில் உள்ள பிரபல பூங்கா ஒன்றில் 5 வயது சிறுமியை வெளிநாட்டு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து இது மாதிரியான சம்பவம் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி தொடர்ந்து வழிமுறைகளை வெளியீட்டு வருகிறது. அதில் முக்கியமான வழிமுறை என்றால் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்பது தான். இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக 272 பேர் மட்டுமே ஆன்லைனில் உரிமம் பெற்றிருந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியான மூன்று நாட்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பலர் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். சிலர் விண்ணப்பிக்க தெரியாமல் திகைத்து நிற்கின்றன. எனவே எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து கீழே பார்க்கலாம். அதாவது செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமம் பெற விரும்பும் உரிமையாளர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று செல்லப்பிராணிகள், உரிமையாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு ரூ 50 கட்டணம் செலுத்தி உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.