தற்போது குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இது போன்ற ஆபாச படங்களை பார்ப்பதும் அதனை பதிவிறக்கம் செய்வதும் POCSO சட்டத்தின் அடிப்படையில் குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளது.
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
குழந்தைகள் ஆபாச படங்கள் :
எந்தவொரு தனிப்பட்ட சாதனத்திலிருந்தும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது அல்லது வைத்திருப்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது போன்ற வெளிப்படையான பொருட்களை வைத்து பார்ப்பதும் சட்டப்படி குற்றமாகும் என்று நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
POCSO சட்டம் :
ஒருவரின் மின்னணு சாதனத்தில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்குவது அல்லது அதனை பார்ப்பது POCSO மற்றும் IT சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தற்போது நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ் ஹரிஷ் என்ற 28 வயது இளைஞர் தனது மொபைல் போனில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
மேலும் இந்த இளைஞருக்கு எதிரான கிரிமினல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்,
சிறார் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல அதனை மற்றவர்களுக்கு அனுப்புவது தான் தவறு என்று கூறி அந்த இளைஞரை வழக்கிலிருந்தது விடுதலை செய்தார்.
கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்? எந்த மாநிலம் தெரியுமா? முழு விவரம் உள்ளே!
அந்த வகையில் என்ஜிஓ, ஜஸ்ட் ரைட் ஃபார் சில்ட்ரன் கூட்டணி மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மேல்முறையீட்டின் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் ஆபாச படங்கள் பார்த்த நபர் மீது மீண்டும் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் புதிய பரிந்துரைகள் அடிப்படையில் வழக்கை விசாரிக்க ஆணை.
மேலும் போக்சோ சட்டப்பிரிவுகள் 19 , 21 ல் திருத்தும் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு