“டிராகன் பால்”
பொதுவாக காமிக்ஸ் புத்தகம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதில் மக்களுக்கு மிகவும் பேவரைட்டான காமிக்ஸ் புக் என்றால் அது “டிராகன் பால்” தான். இந்த புத்தகம் கிட்டத்தட்ட உலகெங்கும் 260 மில்லியனுக்கும் மேல் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகத்தை எழுதியவர் தான் அகிரா டொரியாமா. இவர் பல எழுத்தாளருக்கும் முன்னோடியாக இருந்து வந்தார். மேலும் இவரின் புத்தகங்கள் தொலைக்காட்சி தொடர் வடிவில் கடந்த 1984ம் ஆண்டு ஒளிபரப்பானது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது “சோன் கோகு” என்கிற சிறுவன் ஒருவன் டிராகன்கள் இருக்கும் மந்திர பந்துகளை சேகரித்து அதன் மூலம் மக்களுக்கு வரும் ஆபத்துகளை தடுத்து உலகத்தை காப்பாற்ற போராடுவதே இக்கதைகளின் மையக்கருவாகும். இந்நிலையில் இந்த கதையை எழுதிய அகிரா டொரியாமாவுக்கு மூளையில் “சப்டியூரல் ஹீமடோமா” உருவான காரணத்தால் அவர் கடந்த மார்ச் 1ம் தேதி உயிரிழந்தார். தற்போது தான் இவருடைய இறப்பு செய்தி குறித்து தகவல்கள் வெளியாகி வண்ணம் இருக்கிறது. மேலும் அவர்களுடைய ரசிகர்களுக்கு இந்த மரண செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.