Home » செய்திகள் » தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது – காரணம் என்ன தெரியுமா ?

தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது – காரணம் என்ன தெரியுமா ?

தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது - காரணம் என்ன தெரியுமா ?

திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது, போலீசார் இன்று காலை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, மேலும் இவர் திரைப்படங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும், நாடகக் காதல்களையும் விமர்சித்து படத்தை இயக்கியுள்ளார். draupathi movie director Mohan ji arrested

அத்துடன் இவரது திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து நிலையில் தொடர்ந்து பாமக ஆதரவாளராகவே தன்னை காட்டிக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜியை தற்போது போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ததிற்கு என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான எந்தவொரு முறையான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை.

அத்துடன் இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. ,மேலும் அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் இயக்குநர் மோகன்ஜியை வீடியோ பதிவு ஒன்றில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இருப்பினும் கைதுக்கான முழுமையான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top