பார்டா.., எதிர் நீச்சல் சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.., தளபதியின் GOAT படத்தில் இணைந்து அசத்தல் - வெளியான முக்கிய போட்டோ!! பார்டா.., எதிர் நீச்சல் சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.., தளபதியின் GOAT படத்தில் இணைந்து அசத்தல் - வெளியான முக்கிய போட்டோ!!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நட்சத்திரம் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விஜய் GOAT கதை
விஜய் GOAT கதை

இந்நிலையில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் தற்போது சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் நடிகை நடித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரன் மனைவியாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கனிகா தான் கோட் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவரும் வெங்கட் பிரபுவும் எடுத்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இவர் இப்படத்தில் நடித்துள்ளாரா அல்லது டப்பிங் செய்துள்ளாரா என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டால் தான் தெரியும். 

அட., சிவா இப்படி பட்டவரா? வாய்ப்பு கேட்டு வந்த நண்பன்., பணத்தை காட்டி அசிங்கப்படுத்திய சோகம்.., கண்கலங்கிய விஜய் பட நடிகர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *