
அதிகளவு எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரசனைகள் குறித்த காண்போம். அத்துடன் உடலுக்கு தீமை விளைவிக்கும் இந்த வகையான உணவுகளை அடிக்கடி சம்பிடுவதை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரசனைகள்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
எண்ணெய் பலகாரங்கள் :
சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமது உடல்நலம் எந்தவொரு நோய்த்தாக்கத்திற்கும் ஆட்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். ஆனால் நம்மில் பலர் இதனை பின்பற்றுவதில்லை. தினசரி துரித உணவுகள், அதுமட்டுமல்லாமல் அதிகளவு எண்ணெயில் பொறித்த உணவுகளை உட்கொள்ளவதால் தேவையில்லாத சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது குறித்து காண்போம்.
தீமைகள் :
நாம் எண்ணெயில் சமைத்த உணவு பொருட்களில் கலோரிகள் அதிகமாக இருக்கும். இதனால் அவற்றை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் இந்த வகையான உணவுகளில் கொழுப்பு சத்து சற்று அதிகமாக இருக்கும். அதன் காரணமாக ரத்தத்தில் கெட்ட கொழுப்புச்சத்து அதிகரித்து இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
இதனை தொடர்ந்து எண்ணெய் அதிகமாக பயன்படுத்தப்படும் பலகாரங்களில் சர்க்கரையின் அதிகமாக இருக்கும் காரணத்தால் இவற்றை அதிகமாக எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். மேலும் வயிற்று வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் – எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தம் தெரியுமா ?
அத்துடன் எண்ணையில் உணவு பொருட்களை அதிக வெப்பநிலையில் பொரித்தால் உருவாகும் சில நச்சுப்பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதன் பின்னர் பல் துளைப்பு, முகப்பரு உள்பட சில பிரச்சனைகளும் வரும்.
இதனை கருத்தில் கொண்டு அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சிறந்த சத்துள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஹெல்த் டிப்ஸ் செய்திகள் :
சோம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மையா?
சோப்பு போட்டு முகத்தை கழுவுவது நல்லதா?