ECHS தமிழ்நாடு ஆட்சேர்ப்பு 2024. முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் பாலிகிளினிக் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்கள் மற்றும் முன்ன படைவீரர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
ECHS தமிழ்நாடு ஆட்சேர்ப்பு 2024
வகை:
அரசு வேலை
அமைப்பு:
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் பல் வகை மருத்துவமனை
பணிபுரியும் இடம்:
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
மருத்துவ நிபுணர் (Medical Specialist) – 2
மகப்பேறு மருத்துவர் (Gynecologist) – 2
கதிரியக்க நிபுணர் (Radiologist) – 2
மருத்துவ அதிகாரி (Medical Officer) – 17
பல் மருத்துவர் (Dental Officer) – 9
செவிலிய உதவியாளர் (Nursing Assistant) – 11
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician) – 9
ஆய்வக உதவியாளர் (Lab Assistant) – 3
மருந்தாளுனர் (Pharmacist) – 11
பல் நலன் மருத்துவர் (Dental Hygienist) – 8
கதிர்ப்படப் பதிவாளர் (Radiographer) – 2
உடலியக்க மருத்துவர் (Physiotherapist) – 3
பொறுப்பு அதிகாரி (Officer in Charge) – 9
ஓட்டுனர் (Driver) – 9
தூய்மை பணியாளர் (Safaiwala) – 9
எழுத்தர் (Clerk) -10
பெண் உதவியாளர் (Female attendant) – 9
காவலாளி (Chowkidar) – 7
தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator) – 3
தகவல் தொழில்நுட்ப வலை (IT Net) – 1
பணியாள் (Peon) – 2
மொத்த காலியிடங்கள் – 138
கல்வித்தகுதி:
மருத்துவ நிபுணர் – MD/MS பட்டம் பெற்றிருக்கவேண்டும்
மகப்பேறு மருத்துவர் – சம்பந்தப்பட்ட சிறப்புத் துறையில் MD/MS படித்திருக்கவேண்டும்
கதிரியக்க நிபுணர் – கதிரியக்கவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்
மருத்துவ அதிகாரி – MBBS பட்டம் பெற்றிருக்கவேண்டும்
பல் மருத்துவர் – பல் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
செவிலிய உதவியாளர் – பொது செவிலியர் மற்றும் மருத்துவச்சி அல்லது செவிலிய டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் – மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
ஆய்வக உதவியாளர் – மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
மருந்தாளுனர் – மருந்தகத்தில் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்
பல் நலன் மருத்துவர் – பல் சுகாதாரத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்
கதிர்ப்படப் பதிவாளர் – கதிர்ப்படப் பதிவாள டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்
உடலியக்க மருத்துவர் – உடலியக்க மருத்துவவத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
பொறுப்பு அதிகாரி – ஓய்வு பெற்ற பாதுகாப்பு அதிகாரியாக இருக்கவேண்டும்
ஓட்டுனர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்
தூய்மை பணியாளர் – எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்
எழுத்தர் – ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
பெண் உதவியாளர் – எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்
காவலாளி – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
தரவு நுழைவு இயக்குபவர் – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
தகவல் தொழில்நுட்ப வலை – தகவல் தொழில்நுட்ப நெட்வொர்க்கிங்ல் டிப்ளமோ பெற்றிருக்கவேண்டும்
பணியாள் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப அதிகபட்சமாக 53,56,63,68 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
ரூ.16,800 முதல் ரூ.1 லட்சம் வரை பதவிக்கு ஏற்ப வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம், தேவையான நகல்கள் ஆகியவற்றை இணைத்து தபால்
மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
தலைமையகம் ECHS,
கோட்டை செயின்ட் ஜார்ஜ் ,
சென்னை – 600009
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பத்தார்கள் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு 26.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.