தூத்துக்குடி கடற்கரையில் புதிய வகை "விலாங்கு மீன்" கண்டுபிடிப்பு - சாப்பிட உகந்ததா? விஞ்ஞானிகள் ஆய்வு!!தூத்துக்குடி கடற்கரையில் புதிய வகை "விலாங்கு மீன்" கண்டுபிடிப்பு - சாப்பிட உகந்ததா? விஞ்ஞானிகள் ஆய்வு!!

தூத்துக்குடி கடற்கரையில் புதிய வகை “விலாங்கு மீன்” கண்டுபிடிப்பு: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விஞ்ஞானிகள்  கடலில் உள்ள அரிய வகை மீன்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு  ஒரு அரிய வகை மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன்  மாதிரிகளை கோடீஸ்வரன் என்ற ஆராய்ச்சியாளர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார். இந்நிலையில் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அந்த மீன்  ‘அரியோசோமா’ என்ற புதிய வகை விலாங்கு மீன் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இந்த வகை காங்கிரிட் ஈல்ஸில் 32 இனங்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி உலகளவில்  243 வெவ்வேறு ஈல் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் தற்போது தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மீனை மனிதர்கள் சாப்பிடலாமா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த மீன் மற்ற வகை மீன்களை விட கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது. குறிப்பாக விலாங்கு மீன் தூத்துக்குடி கடற்கரையில் 60 மீட்டர் ஆழத்தில் தான் காணப்படுகிறது. மேலும் குறைந்த பட்சம் 42 சென்டிமீட்டர் நீளம் கொண்டவையாக உள்ளன என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.தூத்துக்குடி கடற்கரையில் புதிய வகை “விலாங்கு மீன்” கண்டுபிடிப்பு – Eel caught in 2021

ரயில்களில் இனி இந்த பயணிகளுக்கு லோயர் பர்த் கன்பார்ம் – இந்திய ரயில்வே துறை அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *