பம்பரம் சின்னம் விவகாரம்
மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மனு தாக்கல் செய்து வந்தனர். மேலும் பெரும்பாலான கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், மதிமுகவுக்கு மட்டும் சின்னம் ஒதுக்கப்படாமல் இருந்தது. அதாவது திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும், அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலிலும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதுமட்டுமின்றி பம்பரம் சின்னம் தொடர்பாக இன்று காலைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதிமுக கட்சிக்கு பம்பரம் சின்னம் தர தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் தர முடியாது. அதுமட்டுமின்றி ஏற்கனவே ஒரு கட்சிக்காக ஒதுக்கப்பட்ட சின்னத்தை பொது சின்னமாக அறிவிக்க முடியாது என்றும் அது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.