நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு விரைவில் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விருதுநகரில் EVM ஆய்வு :
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். அந்த வகையில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடைபெற்றதாக தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது பாஜக மற்றும் தேமுதிக அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகரில் 14 வாக்கு பதிவு மையங்களில் EVM இயந்திரம் சோதனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2024 ! 8ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம் !
மேலும் வேலூரில் உள்ள 6 வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட EVM இயந்திரங்களை ஆய்வு செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.