தேர்தல் ஆணையம்
மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், ஏழு கட்டங்களாக நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அந்த வகையில் முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. மேலும் நாளையோடு வேட்புமனு தாக்கல் முடிவடைய இருக்கும் நிலையில், எந்தெந்த கட்சிக்கு என்னென்ன சின்னம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கியமான கடமையாகும். அதனால் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். மேலும் வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட போகும் வாக்காளர்கள் மொபைல் போனை எடுத்து செல்ல கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.