தேர்தல் பத்திரம் விவகாரம்
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு “தேர்தல் பத்திரம்” என்ற திட்டத்தை செயல்முறை படுத்தியது. மேலும் இந்த திட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் SBI வங்கி கடந்த மார்ச் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதை தேர்தல் ஆணையம் மார்ச் 15ம் தேதி வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து SBI வங்கி மார்ச் 30 வரை கால அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து SBI வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி நேற்று (12-03-24) வழங்கியது. இதில் நாடு முழுவதும் 2019-2024 வருடத்திற்குள் கிட்டத்தட்ட 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக SBI வங்கி இன்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளது என்றும் 187 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்படவில்லை என்றும் அவை அனைத்தும் பென் டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டதாகவும் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.