இந்தியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் எலிஸ் பெர்ரி கிட்டத்தட்ட 3 சாதனை படைத்த -தாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய – ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, பிரிஸ்பேனில் நேற்று 2வது போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 371 ரன்கள் எடுத்திருந்தது.
ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!
இதில், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 60 ரன்களும் மற்றும் ஜார்ஜியா வோல் 130 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை ஆரம்பித்தனர். அதன்பிறகு களமிறங்கிய எலிஸ் பெர்ரி 75 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்களுடன் 105 ரன்கள் எடுத்து சதத்தை பூர்த்தி செய்தார். இவ்வாறு பட்டைய கிளப்பிய 105 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார்.
ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!
எனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிவேக சதம் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் சிதறவிட்ட ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையையும் எலிஸ் பெர்ரி பெற்றார். இது தவிர, ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த 4வது ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையையும் பெர்ரி பெற்றுள்ளார். மேலும் 300 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் நாளை (10.12.2024) மின்தடை! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!