எக்ஸ் வலைத்தளம் உரிமையாளர் எலான் மஸ்க் தற்போது பயனாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எலான் மஸ்கின் அடுத்த நடவடிக்கை – இனி இந்த விஷயத்துக்கும் கட்டணம்?
உலகில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமாக இருந்து வரும் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னணி பணக்காரர் எலான் மஸ்க் வாங்கினார். வாங்கிய கொஞ்ச நாட்களில் ட்விட்டர் வலைத்தளத்தை எக்ஸ் வலைத்தளம் என்று பெயரை மாற்றினார். அது போல அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” எக்ஸ் தளத்தில் இனிமேல் புதிதாக இணையும் யூசர்கள் அவர்களுடைய கருத்துக்களை பதிவிடவும், அதே போல் மற்றவர்களின் பதிவுகளுக்கு பதில் அளிக்கவும் லைக் போடவும் மற்றும் புக் மார்க் செய்ய கட்டணம் வசூலிக்க இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக போலி கணக்குகளை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என மாஸ்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு X தள பயனாளர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.