எம்புரான் சர்ச்சையை தொடர்ந்து தற்போது நடிகர் மற்றும் இயக்குனருமான பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET CINEMA NEWS
எம்புரான் திரைப்படம்:
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் லூசிஃபர்'. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும்
எம்புரான்’ திரைப்படம் கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மேலும் எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதனையடுத்து சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் மீண்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்:
இதனை தொடர்ந்து ‘எம்புரான்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் நிதி நிறுவனத்தின் அதிபர் கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து நடிகரும் எம்புரான் திரைப்பட இயக்குநருமான பிரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
தனுஷ் நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
எம்புரான் திரைப்படத்தை இயக்கிய பிரித்விராஜ் அப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எம்புரான் படத்தில் பணியாற்றியதற்காக பிரித்விராஜ் ரூ.40 கோடி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் அவரிடம் வருமான வரித்துறை விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.