என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம். தமிழ்நாடு காவல்துறையின் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அறியப்பட்ட வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் இன்று பணி ஓய்வு பெற உள்ள நிலையில் உள்துறை சார்பில் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை :
என்கவுண்டர் வெள்ளத்துரை அயோத்திக்குப்பம் வீரமணி, சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்ட்டர் ஆபரேஷன்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். தற்போது தனது 25 வருட காவல்துறை பணியில் 12 என்கவுன்ட்டர்கள் இவரால் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது ஐ.ஜி. விஜயகுமார் தலைமையில் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வீரப்பனைச் சுட்டுப்பிடித்த வழக்கில் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பி.யானவர் வெள்ளத்துரை என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளைத்துரை சஸ்பெண்ட் :
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைதான ரவுடி மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்ததின் மூலம் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயர் பெற்றார் வெள்ளத்துரை.
தற்போது இந்நிலையில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் வெள்ளைத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை கைதி மரணம் :
கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தியில் குமார் என்ற கொக்கி குமார் என்பவர் போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்தார்.
விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2024 – இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை !
இந்தநிலையில் என்கவுண்டர் வெள்ளத்துரை மீது தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக பிரிவு ஏடிஎஸ்பியாக தற்போது பணியாற்றி வந்த வெள்ளத்துரை இன்றோடு ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.