அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு. இந்தியாவில் தற்போது முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் பல்வேறு முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு :
அமலாக்கத்துறை வழக்குகளில் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின்றி அமலாக்கத்துறை யாரையும் கைது செய்யக்கூடாது என்று சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பான கைதுகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
Sunil Chhetri Retirement 2024: இந்திய கால்பந்து அணி கேப்டன் திடீர் ஓய்வு – வெளியான ஷாக்கிங் வீடியோ!
பி.எம்.எல்.ஏ சட்டப்பிரிவு 19 ன் கீழ் ஒரு தனிநபர் மீது சந்தேகம் இருந்தாலே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும், இந்நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. enforcement cases restrictions.