
பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வு 2024: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மட்டும் கிட்டத்தட்ட 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே இவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகிறது.
பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வு 2024
அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மே மாதம் நடந்த கலந்தாய்வில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவர்களுக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் கடந்த மே மாதம் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து தற்போது பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கு கடந்த 28ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Also Read: 1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ் – பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அதன்படி விண்ணப்பிக்க நினைக்கும் மாணவர்கள் www.tneaonline.org, www.dte.tn.gov.in என்ற இந்த இரண்டு இணையதளங்கள் மூலம் துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் நேரம் கடத்தாமல் உடனே விண்ணப்பித்து பொறியியல் கல்லூரியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை