இன்ஜினியரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு 2024 ஜூன் 6 முதல் தொடக்கம்: தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு கீழ் இருக்கும் அனைத்து கல்லூரிகளிலும் வருடந்தோறும் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் மாதத்திலோ அல்லது மே மாதத்திலோ தான் நடைபெறும். ஆனால் நடப்பாண்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் செமஸ்டர் தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பு இருக்கிறது என்று பல்கலைக்கழகம் முன்னரே தெரிவித்திருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இருப்பினும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு வருகிற மே 15ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று கூறி சமீபத்தில் அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் செமஸ்டர் தேர்வு குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் வாக்கு பதிவு பெட்டிகள் பெரும்பாலான கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ளது. எனவே செமஸ்டர் தேர்வை மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதாவது ஜூன் 6ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் ஆரம்பிக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள மாணவர்கள் https://www.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்துக் கொள்ளலாம்.
தலைவர் விஜய்யின் முதல் மாநாடு மதுரையில் நடக்கிறது? எப்போது தெரியுமா? ரகசியமாக பணிகளை செய்யும் த.வெ.க கட்சியினர்!!
இன்ஜினியரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு 2024 ஜூன் 6 முதல் தொடக்கம்