மாணவர்களே - பொறியியல் படிப்பிற்கு 20% கட்டண உயர்வு.., தனியார் கல்லூரிகள் எடுத்த அதிரடி முடிவு?மாணவர்களே - பொறியியல் படிப்பிற்கு 20% கட்டண உயர்வு.., தனியார் கல்லூரிகள் எடுத்த அதிரடி முடிவு?

பொறியியல் தனியார் கல்லூரிகளில் படிக்க போகும் மாணவர்களின் கல்வி கட்டணம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 12 ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், விரைவில் இதற்கான முடிவுகள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்புகள் மீது அலாதி ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் 2024 – 25 ஆம் கல்வியாண்டு புதிதாக தொடங்க உள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

அதன்படி மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர இருக்கும் மாணவர்களுக்கு  கல்வி கட்டணத்தை 20% உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆர் பொங்கியப்பன் தலைமையிலான குழு நிர்ணயம் செய்து வருகிறது. மேலும் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு கல்லூரிகளை நடத்துவதற்கு தேவையான செலவுகள் 2  மடங்கு அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தனியார் கல்லூரிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சற்று கவலையில் இருந்து வருகின்றனர். 

பெண்களே லோன் வேணுமா? ரூ.50000 அளிக்கும் அன்னபூர்ணா யோஜனா.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *