12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கவனத்திற்கு பொறியியல் மாணவர் சேர்க்கை 2024: தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் மே 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் மேல்நிலை படிப்புக்கான கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் பெரும்பாலான மாணவர்கள் எதிர்பார்த்து பார்த்து காத்துக் கொண்டிருந்த பொறியியல் படிப்பு கல்லூரியில் சேர கடந்த சில நாட்களாக விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை எந்த ஆண்டுகளிலும் இல்லாத அளவுக்கு இம்முறை அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள், அதாவது, இன்றுடன் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைய இருக்கிறது. எனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் http://www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் நாளை(ஜூன் 12) ரேண்டம் எண் மற்றும் ஜூலை 10ம் தேதி தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட இருக்கிறது. இதையடுத்து ஒதுக்கீடு செய்து மாணவர்களின் மதிப்பெண் கேற்ப கல்லூரிகள் ஒதுக்கீடு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்.. பாட்னாவை சேர்ந்த 13 பேர் அதிரடி கைது… போலீஸ் தீவிர சோதனை!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல்
T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு.