ஆளப்போறன் தமிழன் - இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளி பெண் - அட்ராசக்க!ஆளப்போறன் தமிழன் - இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளி பெண் - அட்ராசக்க!

England Election 2024: ஆளப்போறன் தமிழன் – இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்று எம் பியான தமிழ் வம்சாவளி பெண்: பிரிட்டனில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 8  தமிழர்கள் வேட்பாளராக நின்றனர். இது தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்து ஒரு பெண் எம்.பி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் பவ் தொகுதியில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் என்பவர் போட்டியிட்டு உள்ளார்.

இதில்  தொழிலாளர் கட்சியின் உமா குமரன் மொத்தம் 19,145 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற நிலையில்,  அவர் தொடர்ந்து கிரீன் கட்சியைச் சேர்ந்த ஜோ ஹட்சன் 7,511 வாக்குகளையும் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். தற்போது  உமா குமரனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: என்னது பலூனுக்குள்ள தியேட்டரா? – தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா? – ஆனா இது புதுசா இருக்குனே?

மேலும் ஆளப்போறன் தமிழன் என்று தமிழர்கள் தொடர்ந்து நிரூபித்து கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் பல்வேறு கட்சியினர் அவருக்கு வாழ்த்துக்களை பொழிந்த வண்ணம் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளப்போறன் தமிழன் – இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளி பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *